2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் 16 முதலைக்குட்டிகள் மீட்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புன்னச்சோலை பிரதேசத்தில் 16 முதலைக்குட்டிகள் மற்றும் 10 முட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி பிரதேசத்தில்  வீடொன்றின் பின்புறத்திலுள்ள குழியொன்றிலிருந்து முதலைக்குட்டிகளும் முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் புதன்கிழமை (9) மாலை இறந்த நிலையில் முதலைக்குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மண்வெட்டியால் குறித்த குழியை தோன்றியபோது 16 முதலைக்குட்டிகளும் 10 முட்டைகளும் மீட்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த முதலைக்குட்டிகளை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X