2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 3 மீனவர்கள் சரீரப்பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டை பிடிக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் மூவரையும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.எம்.ஹுசைன் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை ஆஜர்படுத்தியபோதே அவர்,  இவர்களை சரீரப்பிணைகளில் விடுவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசக் கடலில் அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டை பிடிக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மேற்படி மீனவர்கள் மூவரையும் நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளதாக  வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், இவர்களிடமிருந்து வெளியினை இயந்திரப்படகுகள்  02, அதற்;கு பயன்படும் இயந்திரங்கள் 02, சிலின்டர்கள் 12, கடல் அட்டைகளுடன் கூடிய பரல்கள் 03, நீச்சல் உடைகள் 04  உள்ளிட்டவைகளை கைப்பற்றியதாகவும் வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பிரதேச மக்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து வாகரைப் பிரதேச கடற்றொழில் பரிசோதகரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது நேற்று சனிக்கிழமை  இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .