2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 456 பட்டாதாரிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நியமனம்

Super User   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான், ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 456 பட்டாதாரிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இவ்hகளில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இணைக்கப்படவுள்ள 25 பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச்;.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி உட்பட பலர் கலந்துகொண்டு நியமன கடிதங்களை கையளித்தனர்.

இதேவேளை, இந்த திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இணைத்துகொள்ளப்படவுள்ளவர்களுக்கான நியமன கடிதங்களை பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கையளித்தார்.

இந்நிகழ்வுகளில் மட்டு. மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0

  • rima Wednesday, 17 October 2012 11:31 AM

    இதை நம்பக் கூடாது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .