2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 500 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் புதிதாக 500 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்படவுள்ளதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபன மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எஸ்.சசிகரன் தெரிவித்தார்.

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாகவும் தெரிவித்த அவர் மழை காலம் ஆரம்பித்ததும் நடுகை திட்டம் ஆரம்பிக்கப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் ஆரையம்பதி, கிரான், செங்கலடி, வாகரை, களுவாஞ்சிக்குடி உட்பட பல பிரதேச செயலகப்பரிவுகளில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 1995ம் ஆண்டு முதல் இவ்வாண்டு  வரையான 18 வருடங்களில் இம்மாவட்டத்தில் 6000 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் மரமுந்திரிகை செய்கையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .