2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 63.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

Kogilavani   / 2013 ஜனவரி 23 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பில் மீண்டும் பலத்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.  இன்று காலை எட்டு மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 63.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய வளிமண்டலவியல் அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார்.

கிழக்கில் கடந்த ஒரு வாரகாலமாக சீரான காலநிலை நிலவி வந்தது. எனினும்;, தற்சமயம் பெருமழை பெய்ய ஆரம்பித்திருப்பதால் தமது நெல் வயல்கள் விளைந்து அவற்றை அறுவடை செய்யத் தயாராகவிருந்த விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

இந்தச் சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடித்தால் பெருமளவிலான நெற்செய்கைகள் அழிவடையக் கூடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .