Princiya Dixci / 2021 மார்ச் 15 , பி.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
இராணுவத்தினருக்காக தாந்தாமலையில் 1,500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்கும் நடவடிக்கையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள தாந்தாமலை பிரதேசத்திலுள்ள 1,500 ஏக்கர் காடுகளை, இராணுவத்தினரின் தேவைக்காக சட்டவிரோதமாக கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதற்கு இன்று (15) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன், குறித்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் இருவரும் வலியுறுத்தியிருந்தனர்.
இதனை அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் ஏற்றுக்கொண்டிருந்ததுடன், பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், அதை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
34 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago