Editorial / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கையின் 151ஆவது பொலிஸ் தின நினைவு நிகழ்வுகள், மட்டக்களப்பு பிரதம பொலிஸ் வளாகத்தில் நேற்று (03) நடைபெற்றன.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர உரையாற்றுகையில்,
1865ஆம் ஆண்டு, இலங்கையின் 16ஆவது திருத்த சட்டத்தின் மூலம் 1866ஆம் ஆண்டு செப்டெம்ர் மாதம் 3ஆம் திகதி ஒழுங்கமைப்புடன், எமது நாட்டின் பொலிஸ் சேவை ஸ்தாபிக்கப்பட்டது.
இதுவரை இந்த நாட்டில் 3,117 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். 1971ஆம் ஆண்டு, முதலாவது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது உயிரைத் தியாகம் செய்தார். கடந்த 30 வருட யுத்தத்தில் 15 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
முழு இலங்கை மக்களின் உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பதற்காக இரவு பகலாக 365 நாட்களும் பொலிஸார் செயல்படுகின்றனர்.
இதுவரைக்கும் 486 பிரதேச பொலிஸ் நிலையங்களில் 87,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளனர். 151 வருட காலத்துக்குள் கிட்டிய 50 வருட காலத்தில் சவால்கள் பலவற்றுக்கு மகங்கொடுத்து, இலங்கை பொலிஸ் பெற்றுக் கொண்ட பாடங்கள் வரையறையற்றன.
யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தத்தின் பின்னரும் குற்றத்தடுப்பு மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு, போதைப்பொருட்களை நாட்டுக்குள் பரவுவதைத் தடுத்ப்பதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஜனாதிபதியின் ஊட்டச்சத்து மிக்க சமூகத்ததை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கற்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மற்றும் பொதிகள் இந்நிகழ்வின் போது வழங்கிவைக்கப்பட்டன
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சி, பிரதம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தயா திகாவத்துர ஆகியோர் கலந்துகொண்டனர்.

41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago