A.P.Mathan / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள படுவான்கரை மக்களுக்கு விவசாய திணைக்களத்தினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுமுந்தன்வெளியில் நேற்று இடம்பெற்ற மாற்றுப் பயிர்ச்செய்கை ஆரம்ப விழாவில் இந்த உதவிப் பொருட்கள் மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கரிகரன், வெல்லாவெளி பிரதேச செயலாளர் உதயசிறிதர் ஆகியேரினால் வழங்கி வைக்கப்பட்டது.
நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் விதைகளை விதைக்கும் இயந்திரம் என்பன இங்கு விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த வெல்லாவெளி பிரதேச செயலாளர் உதயசிறிதர், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அதிகாரிகளினாலும் அரசசார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றபோதிலும் அவற்றினை உரியமுறையில் பயன்படுத்தி தங்களை வளப்படுத்த மக்கள் முயல்வதில்லையென தெரிவித்தார்.
7 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
19 minute ago