Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
30 வருடகால யுத்தத்தில் பல இடர்களைச் சந்தித்து வாழ்ந்து வரும் எமது வடகிழக்கு மக்களை மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என பிரித்துப்பார்க்கும் புலம்பெயர்; மக்கள் உள்ளனர். இவ்வாறான எண்ணக்கருவை புலம்பெயர் மக்கள் கைவிட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு புலம்பெயர் மக்களின் அனுசரணையில் மட்டு. முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்தினால் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ், சிங்கள புத்தாண்டானது தமிழர், சிங்களவர் என்ற பேதமின்றி இரு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துகின்றது. இவ்வேளையில் நாம் விளையாட்டுப் போட்டிகளை மட்டுமல்லாமல் மேலும் பல சமூக விடயங்களையும் உற்றுநோக்க வேண்டும்.
இவ்வருடம் ஏற்பட்ட இரட்டை வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் மக்கள்; பாரிய உதவியளித்துள்ளனர்.; அவர்கள் கடந்த காலத்தில் சொல்லொண்ணாத் துயரங்களை இலங்கையில் அனுவித்தவர்கள். இதனால் அவர்கள் புலம்பெயர்ந்து சென்று அமெரிக்கா, கனடா, லண்டன் போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன்றும் எமது மண், மக்களைப் பற்றியே தான் சிந்தித்துக் கொண்டிருக்கினறனர்.
தேர்தல் நடைபெற்று தற்போது ஒரு வருடமாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும்; தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் வெற்றிபெறச் செய்து உரிமையை நிலைநாட்டியுள்ளனர். அரசாங்கத்துடன் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில்; எமக்கான உரிய தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்கிறோம் என்றார்.
.jpg)
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago