Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கீழ் தற்காலிகமாக பொறுப்பளிக்கப்பட்டிருந்த கள்ளியங்காட்டு மூன்று களஞ்சியசாலைகளையும் பொறுப்பேற்று புனரமைக்கும் பணிகள் கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்ரன் சேவியர் பெர்னாண்டோவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்கள் ஏற்படும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவுவதற்காக உலர் உணவுப் பொருட்கள் கூட்டுறவு அமைச்சால் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அண்மையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்திருந்தார். தேவையான உலர் உணவுப் பொருட்கள் இங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
59 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago