Super User / 2012 ஜனவரி 31 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
"காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கியஸ்த்தர் கடத்தப்பட்டதற்கும் எனக்கும் எந்த தொடர்பில்லை.
குறித்த இயக்கம் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்" என காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் குறித்த இயக்கத்தின் முக்கியஸ்த்தர் ஏ.சி.எம்.அசாம் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் நான் இருப்பதாகவும் அவ்வியக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அப்துர் றஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இச்ம்பவம் தொடர்பாக குறித்த ஊடவியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் வினவும் வரை இது பற்றி நான் அறிந்திருக்கவும் இல்லை கேள்விப்படவும் இல்லை.
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அப்துர் றஹ்மான் குற்றஞ்சாட்டை நான் முற்றாக மறுப்பதுடன் எனக்கும் கடத்தல் சம்வத்திறகும் எந்தவித தொடர்புமில்லை.
இந்த கடத்தல் சம்பவத்தில் எனது பெயரை பயன்படுத்தியதற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு எடுக்கவுள்ளேன். என் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை என் மீது சுமத்துகின்றனர்" என்றார்.
தொடர்புடைய செய்தி:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கியஸ்தர் கடத்தப்பட்டமைக்கு கண்டனம்
13 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago