2026 மே 14, வியாழக்கிழமை

பொலிஸ் - பொதுமக்கள் பங்களிப்பை அதிகரிப்பதற்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் ஊடாக பொலிஸ் - பொதுமக்கள் பங்களிப்பை அதிகரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

பொதுமக்கள் - பொலிஸ் சேவை விரிவுபடுத்தல் திட்ட நடைமுறை மற்றும் பொலிஸ் - பொதுமக்கள் உறவு நிலை பற்றி களுவாஞ்சிக்குடி பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் லியனகே விளக்கமளித்தார்.

இதன்போது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன், இலங்கைப் போக்குவரத்து சபையின் களுவாஞ்சிக்குடி டிப்போ முகாமையாளர் கிருபைராஜா உட்பட ஏழுபேர் செயற்பாட்டுக் குழுவினராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இச்செயற்பாட்டுக் குழுவிடம் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை முறையிட முடியும்.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிராம அலுவலர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .