Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் குறுக்கே வந்த நாயுடன் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குமாரப்போடி ரவிச்சந்திரன் (வயது 37) என்பவரே இவ்வாறு மரணமானவர் ஆவார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் வேளாண்மை வெட்டும் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது.
ஆபத்தான நிலையில் பெரிய கல்லாறு மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
விசாரணை மேற்கொண்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி கருணாகரன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்தார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
34 minute ago