Kogilavani / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்காக நியமனம் பெற்றுள்ள ,லங்கை திருச்சபை அங்கிலிக்கன் மிஷனின் குரு முதல்வர் அருட்பணி எஸ்.பி.நேசகுமார் அடிகளாரை வரவேற்கும் நிகழ்வும் அவரது குருத்துவ வாழ்வின் வெள்ளிவிழாவும் கூட்டுத்திருப்பலி ஆராதனையும் நேற்று மாலை மட்டக்களப்புபுனித தந்திரேயா தேவாலயத்தில் நடைபெற்றது.
ஆலய முகாமைத்துவ குரு அருட்பணி கரோல் போல் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற ,ந்நிகழ்வில், வாழைச்சேனை, அம்பாறை, மைலம்பாவெளி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு கச்சேரி வீதியில் குருமுதல்வருக்கான வரவேற்பு ஊர்வலமும் இடம்பெற்றது. நாட்டின் பல ,டங்களிலிருந்தும் அருட்பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதன்போது, நாட்டின் அமைதி சமாதானத்திற்காக விஷேட பிரார்த்தனையும் இடம்பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
13 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago