2026 மே 07, வியாழக்கிழமை

வாகனேரி விபத்தில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 11 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவைச் சேர்ந்த நிசாந்தன் (வயது 30) என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.  இவ்விபத்தில் காயமடைந்த முனைக்காட்டைச் சேர்ந்த  கிருபாகரன் (வயது 32) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொக்கட்டிச்சோலைப் பகுதியிலிருந்து புணானைக்கு வயல் அறுவடைக்காக சென்றுகொண்டிருந்த இவர்கள் மீது  எதிரே வந்த லொறியொன்று மோதியுள்ளது.  

லொறியின் சாரதிகளை கைதுசெய்த வாழைச்சேனை பொலிஸார்,  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .