Suganthini Ratnam / 2012 மார்ச் 15 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திலுள்ள பால்சேனை பெரியசுவாமி ஆலயத்தில் இருந்த பெறுமதி வாய்ந்த விஷ்னு மற்றும் நாக சுவாமி விக்கிரகங்கள் நேற்று புதன்கிழமை இரவு களவாடப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸில் ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவ தினமான நேற்று புதன்கிழமை பகல் ஆலய பூசகர் வழமைபோன்று ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பியதாகவும் நேற்றையதினம் இரவு வேளையிலேயே இவ் விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago