Suganthini Ratnam / 2012 மார்ச் 20 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் மக்கள் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவுச் சங்கங்களை அபிவிருத்தி செய்வதற்கு மக்கள் வங்கியின் உதவிகள், மக்கள் வங்கிக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இடையிலான தொடர்பினை அதிகரித்தல் போன்றன கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.சி.எம்.ஷரீப், மக்கள் வங்கியின் கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான பணிப்பாளர் ஏ.என்.லியன் பத்திரன, மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஏ.அப்துல் அஸீஸ், உதவி பிராந்திய முகாமையாளர் ஜே.சி.ஜெயதிலக, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கூட்டுறவு உதவி ஆணையாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
6 minute ago
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
1 hours ago
1 hours ago