2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞன் கைது

Kogilavani   / 2012 ஜூலை 30 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                   (கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில்  கடந்த 27 ஆம் திகதி  EP.MW.7588 இலக்கமிடப்பட்ட மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞனை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்ததுடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

இருதயபுரம் கிழக்கு, மட்டக்களப்பைச் சேர்ந்த மயில்வாகனம் யோகேந்திரராசா என்பவர் மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தக்குளத்தில் தாமரை இலை வெட்டிக்கொண்டிருந்த போது குளக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கில் காணமல் போயிருந்தமை தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று முன்தினம் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதுடன் கருவேப்பங்கேணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 14நாள் விளக்க மறியலில் அடையாள அணிவகுப்பிற்காக வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .