2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் பாடசாலை உபகரணங்களும் விநியோகம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


இலங்கை விமானப்படை சேவா வனிதா அமைப்பினால் யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, வலையிறவு மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலைக்கென நிரந்தர வகுப்பறை கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றபோது, விமானப்படை சேவா வனிதா அமைப்பு தலைவி நிலீகா அபேவிக்ரம பிரதம அதிதியாக  கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு விமானப்படை கட்டளை தளபதி கே.வௌகம தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன் உட்பட சேவா வனிதா அமைப்பு பிரதிநிதிகள் விமானப்படை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வறிய மானவர்களுக்கு சேவா வனிதா அமைப்பினால் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .