2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

காத்தான்குடியில் இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


காத்தான்குடியில் இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை நிறுவப்படவுள்ளது. இலங்கையின் முஸ்லிம்கள் தொடர்பான வரலாற்று மற்றும் பாரம்பரியங்களை பாதுகாக்கும் நிலையமாக இந்நூதனசாலை நிறுவப்படவுள்ளது.

இது தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் நேற்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், பிரதி நகர முதல்வர் எம்.எம்.ஜெஸீம் உட்பட கலாசார உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்களின் பாரம்பரிய கலாசாரத்தினை பேணிப்பாதூகாப்பதுடன் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான ஆவணங்கள், பாவித்த பொருட்கள் என்பன இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இதற்காக தேசிய மரபுரிமைகள் அமைச்சு பிரதான வீதியிலுள்ள காத்தான்குடி நகரசபையின் பழைய கட்டடத்தினை இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான நூதனசாலையாக தற்காலியமாக பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் முன்னோடியாக இவ்வாண்டு கலாசார கண்காட்சி காத்தான்குடியில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





  Comments - 0

  • Saajan Thursday, 18 October 2012 06:57 AM

    நல்ல காரியம்... இந்த முயற்சி வெற்றியடைய இறைவனை பிராத்திக்குறோம்.... பிரதியமைச்சர் அவர்களே...!!! எல்லா காரியங்களும் இறை திருப்திக்காக செய்யும் பட்சத்தில் பயன் தரும்......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .