2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டதில் மாணவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாடசாலை சீருடையுடன் பயணிக்கும்போதும் சாதாரண நிலையிலும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பெற்றோர்களை அறிவுறுத்தும் செயலமர்வு நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் தலைமையக பொலிஸ்நிலைய அத்தியட்சகர் கிங்ஸ்லி குணசேகரவின் தலைமையில் நடைபெற்றது.

நகரப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெருமளவிலான பெற்றோர்கள் சமுகமளித்திருந்தனர். மட்டக்களப்பு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோனின் பணிப்புரையின்கீழ் இச்சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் வாகன போக்குவரத்து பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதால் வீதி விபத்துக்களின்போது அதிகமான மரணங்கள் ஏற்படுவதாகவும் காயங்கள் ஏற்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்செயலமர்வில் வாகன போக்குவரத்து பொலிஸார் உட்பட பல உயர்பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இம்மாவட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் பயணிக்கும் போது தலைக்கவசம் அணியாமல் செல்வது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .