2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஒல்லிக்குளத்தில் மண் அகழ முயற்சி

Super User   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் கிராமத்தில் சிலரின் காணியில் சிலர் மண் அகழ்வதற்கு இன்று வியாழக்கிழமை காலை முயன்ற போது, குறித்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மண்முனைத்துறை பால நிர்மாண வேலைகளுக்காக ஒல்லிக்குளம் மற்றும் பாத்திமா புறம் ஆகிய கிராமங்களில் சிலர் மண் அகழ்வதற்கு இன்று காலை முயற்சி செய்துள்ளனர்.

இதையடுத்து காணி உரிமையாளர்கள் காத்தான்குடி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து மண் அகழ்வதை இடைநிறுத்தியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மண் அகழ்வதற்கு முற்பட்ட இக்காணிகள் உறுதி காணிகள் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

  Comments - 0

  • thurai Friday, 19 October 2012 02:45 PM

    தூர்ந்துபோன குளமே தோண்டப்பட்டது. டி.எச். தான் அனுமதித்தார். உறுதி ஆட்சி உறுதி. நீதி மன்றில் நிரூபிக்க வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .