2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான், ரி.லோஹித் )


மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை தொடர்பாக கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கிவந்த பிரச்சினைக்கு இன்று வெள்ளிக்கிழமை தீர்வு காணப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்  உடனடியாகத் தீர்வை பெற்றுக்கொடுத்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்த அவர்  உரிய அதிகாரிகளுடன் பேசியதுடன், நேற்று வியாழக்கிழமை கால்நடைகளை மேய்ப்பதற்காக விடப்படுகின்ற இடங்களான மாந்திரி ஆறு உட்பட மயிலத்தமடு, பாலவெட்டுவான், மாதவளை ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். இதனையடுத்து, அவ்விடங்களில் வழமைபோன்று கால்நடைகளை மேய்ப்பதற்கான அனுமதியையும் அவர் பெற்றுக்கொடுத்தார்.

மியான்குளம் 9ஆம் கட்டையிலுள்ள பாற்பண்ணை வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்த கால்நடை வளர்ப்பாளர்கள்,  இது தொடர்பில் எழுகின்ற பிரச்சினைகளுக்கு முன்னாள் முதல்வரே முன்னின்று எங்களுக்கு செயலாற்ற வேண்டுமெனவும் கேட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலகத்தின் காணித் திட்டமிடல் அதிகாரி திருமதி ஈ.குகதா, கிரான் பிரதேச செயலகத்தின் காணி அதிகாரி உள்ளிட்ட பலர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் சென்று பார்வையிட்டதாக முன்னாள் முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .