2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பெரும்போக விவசாயச் செய்கைக்கான மானிய உர விநியோகம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை மற்றும் கிராண், வாழைச்சேனை, செங்கலடி, வாகரை ஆகிய பிரதேசங்களில் உள்ள சுமார் 150 ஆயிரம் ஏக்கரில் இந்த பெரும்போக விவசாய செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெரும்போக விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்காக அரசினால் மானியமாக விநியோகிக்கப்படும் உரம் விநியோகம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கமநலசேவைகள் நிலையம் ஊடாக சுமார் 420,000 மூடை உரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் நிலைய பணிப்பாளர் டாக்டர் ருசாந்தன் தெரிவித்தார்.

அந்தவகையில், வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான உரம் விநியோக நடடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

பிரதேச விவசாய உத்தியோகஸ்தர் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெல்லாவெளி பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் சுமார் 20ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கான உரம் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .