2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மியானி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு என்.வி.கியூ மற்றும் கியூ.எம்.எஸ் சான்றிதழ் அனுமதி

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பு தன்னாமுனையில் இயங்கி வரும் மியானி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தரமுகாமைத்துவ முறைமை பற்றியும் (Quality Management System), மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி (Tertiary &Vocational Education Commision) தேசிய வாழ்க்கைத்தொழில் தகைமை முறைமை (National Vocational Qualication) LEVEL-05 கற்கைநெறி பற்றியும் அவை தொடர்பான தகவல் பரிமாற்றமும், முன்கற்றல் அங்கீகார முறையினூடாக தொழில் புரிவோருக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு நேற்று தன்னாமுனை மியானி தொழில் பயிற்சி நிலையத்தில் அதிபர் வின்சன்ற் இம்மானுவெல் தலைமையில், நடைபெற்றது.

இந்நிகழ்வில் கனேடிய உலக பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் றிச்சட் பொனோ கொஸ்கி, பிராந்திய பிரதிப் பணிப்பாளர் எம்.எம்.அமீன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பார் திருமதி பவளகாந்தன், ஐக்கிய நாடுகளின் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் தேசிய திட்டப் பணிப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக விவசாய கைத்தோழில் சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சிதமூர்த்தி, மியானி தொழிற் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அருட் தந்தை இருதயநாதன் வென்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு தன்னாமுனையில் சொமஸ்கன் குருக்களால் மியானி தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இவர்களின் பிரதான நோக்கமாக கைவிடப்பட்ட பிள்ளைகளையும், இளைஞர் யுவதிகளையும், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களையும் ஒருகுடும்ப சூழலில் தரம் உயர்த்தி அவர்களுக்கு ஒரு கண்ணியமான, கௌரவமான வாழ்க்கைத்தரத்தை அமைத்துக் கொடுக்க முயற்சிக்கின்றார்கள். அவரவர் மதக்கோட்பாடுகளுக்கு இணங்க இறையரசு பற்றிய அறிவுரைகளும் அனுஷ்டானங்களும் பேணப்பட்டு வருகின்றன.

இத் திட்டம் தச்சுத் தொழில், மேசன் மற்றும் தையல் கலை பயிற்சிகள் மூலம் 2006ஆம் ஆண்டு பங்குனி மாதத்திலிருந்து 2007ஆம் ஆண்டுவரை இடம்பெற்றது. 2008 தை மாதத்தில் தகவல் தொழிநுட்பம் மற்றும் வெதுப்பகத் தொழில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகின. இவை ஆறு மாதகால பயிற்சியாகும். ஆனால் தற்போது NVQ SYSTEM அடிப்படையில் 12 விதமான பயிற்சி வகுப்புகள் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவால் (TVEC) உள்வாங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் TVEC, மியானி தொழிநுட்பநிலையத்தினை தரம் 'A+' க்கு பதிவுசெய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது வெதுப்புனர் (BAKER) தையல் கலைஞர் (TAILOR), கணினி வன்பொருள் தொழிநுட்பவியலாளர் (COMPUTER HARDWARE TECHNICIAN), கணினி வலைப்பின்னல் தொழிநுட்பவியலாளர் (COMPUTER NETWORK TECHNICIAN) மற்றும் தகவல் தொலைத்தொடர்பு தொழிநுட்பவியலாளர் (INFORMATION & COMMUNICATION TECHNOLOGY TECHNICIAN), கணினி ஓவியக் கலை வடிவமைப்பாளர் (COMPUTER GRAPHIC DESIGNER), காரியதரிசி (SECRETARY) மற்றும் முன்பள்ளி ஆசிரியர் (PRE-SCHOOL TEACHER) உள்ளிட்ட கற்கைநெறிகள் கற்பிக்கப்படுகின்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .