2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டு. மாவட்ட அலுவலகம் திறப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவருமான பொன் செல்வராசா, மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், இந்திரகுமார் பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு நல்லையா வீதியில் திறந்து வைக்கப்பட்ட இவ்வலுவலக திறப்பு விழாவில், மட்டக்களப்பு கல்குடா, பட்டிருப்பு தொகுதிகளின் தமிழரசுக் கட்சி கிளைத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகங்கள் மட்டக்களப்பில் திறக்கப்படவில்லை என்ற குறைபாட்டைத் தீர்க்கும் வகையில் இவ் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி அதுரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .