2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

காலநிலை மாற்றமே கடல் மீன்கள் உயிரிழக்க காரணம்: பெ.வினோபாவா

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கடலில் மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்த சம்பவமானது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிகழ்வு என கிழக்கு பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறைத் தலைவர் கலாநிதி பெ.வினோபாவா தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடலில் குளிரான பகுதியில் நடமாடும் குறித்த மீன் இனங்கள் காலநிலை மாற்றம் காரணமாகவே கரையை நோக்கி நகர்ந்திருக்கலாம். அதாவது கரையோரத்தை நோக்கிய பகுதிகளில் வெப்பநிலை குறைந்த நீரோட்டங்;கள் வந்ததால் இந்த நிலமை ஏற்பட்டிருக்கலாம். இது காலநிலை மாற்றத்தினுடாக நிகழும் சில மாற்றங்கள் ஆகும்.

இந்த மாற்றங்களை அறிந்துகொள்ள அவுஸ்ரேலியாவிலுள்ள பேத் பல்கலைக் கழகத்திலுள்ளது போன்று எமது நாட்டில் இல்லை. சமுத்திரவியல் பாடநெறிகள் எமது நாட்டில் இல்லாதநிலையில் சமுத்திரத்தில் நடைபெறுகின்ற மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாதுள்ளது.

சமுத்திரவியல் பாடநெறிகள் இருக்குமானால் சமுத்திரத்தில் இப்படியான மாற்றங்கள் நிகழும்போது அடுத்தது என்ன நடக்கும் அதாவது மழை பெய்யுமா? வெள்ள அனர்த்தம் ஏற்படுமா? என்பதை முன்கூட்டியே அறியக்கூடியதாக இருக்கும்.

மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வருவது என்பது புதிய விடயம் அல்ல. சில காலப்பகுதியில் குறிப்பாக மழை வீழ்ச்சி கூடிய பருவப் பெயர்ச்சி காலங்களில் கிழக்கு கரையோரத்தில் பல பகுதிகளில் நடைபெறுவது வழமை ஆனால் இம்முறை சில சமயம் கூடுதலாக வந்திருக்கலாம்.

 இந்த மீன்களை உண்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. சில சமயம் பாதிப்பு இருக்கும் என்று கருதினால் உயிரியல் இரசாயணவியல் பரிசோதனை மூலம்தான் பரிசோதிக்க முடியும். ஆனால் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தை பொறுத்தவரை இந்த மீன்களை உண்பதால் பாதிப்பு ஏற்படும் என கருத முடியாது. காரணம் காலநிலை மாற்றம் காரணமாக மீன்கள் தாங்கள் வாழும் சூழலை நோக்கி நகர்துள்ளதே தவிர வேறு காரணங்கள் இல்லை' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .