2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஹஜ் பெருநாள் பஸார் தொடர்பான கலந்துரையாடல்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


சுமார் 22 வருடங்களின் பின்னர் காத்தான்குடி பிரதான வீதியில் அமயைவுள்ள புனித ஹஜ்ஜூப் பெருநாள் பஸார் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று மாலை பெருநாள் பஸார் அமையவுள்ள பஸ்மலா சதுக்க பாலர் பாடசாலை கட்டிடத்தில் நடைபெற்றது.

பெருநாள் பஸாருக்கு வருகைதரும் மக்களின்  குடிநீர் பிரச்சினை, பாதைகள் மூடப்படுதால் மாற்றுப்பாதை ஏற்பாடுகள், வாகன மற்றும் மோட்டார், துவிச்சக்கர வண்டி தரிப்பிடங்கள், பொலிஸ் பாதுகாப்பு, மின்சாரவசதி உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன.

பஸ்மலா பெருநாள் பஸார் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் எம்.ஏ.நிலாம் உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்

கடந்த 1990ஆம் ஆண்டு கிழக்கில் ஏற்பட்ட இனவன்முறைகளை அடுத்து பல்லாண்டுகாலமாக காத்தான்குடி பிரதான வீதியில் நடாத்தப்பட்டுவந்த பெருநாள் பஸார் புதிய காத்தான்குடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயில் நிர்வாகத்தின் கீழ் பாதுகாப்பு கருதி புதிய காத்தான்குடிக்கு மாற்றப்பட்டது. அதனால் கடற்கரை வீதியிலும் ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திலும் நடாத்தப்பட்டு வந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள அமைதிச் சூழலினால் மீண்டும் 22 வருடங்களின் பின்னர் பெருநாள் பஸார் இம்முறை பிரதானவீதி பஸ்மலாச்சந்தியில் நடாத்தப்படவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .