2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் நிலையம் திறந்து வைப்பு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் நிலையத்தை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் - குறிஞ்சாமுனையில் நேற்றுத் திறந்துவைத்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டே இதனை திறந்துவைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராசா கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக சிறுவர் நிதிய பிராந்திய முகாமையாளர் ஜே.பேர்னாட் பிரகாஸ், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள உளச் சமூக வள நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.அரிதரன ஆகியோர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .