2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முதன்முறையாக இயற்கை கூட்டுப்பசளை விற்பனை நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாநகரசபையினால் முதன்முறையாக இயற்கை கூட்டுப்பசளை விற்பனை நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு பஸ்நிலையத்துக்கு முன்பாக இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

எதிர்கால சந்ததிக்கு நஞ்சற்ற உணவை வழங்கும் நோக்குடன் விவசாயிகளுக்காக இந்த இயற்கை கூட்டுப்பசளையை மட்டக்களப்பு மாநகரசபை தயாரித்துவருகின்றது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் அகற்றப்படும் திண்மக் கழிவுகளைக்கொண்டு இந்த இயற்கை கூட்டுப்பசளை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிலையத்தை திறந்துவைத்து விற்பனையை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையாளர் சிவநாதன், மாநகரசபை உறுப்பினர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்களான வா.ரமேஸ்குமார், இராஜேந்திரா உட்பட மாநகரசபை ஊழியர்கள், பொதுமக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.





இதேவேளை மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் இளைப்பாறும் இடமும் பொதுமக்களின் பாவனைக்காக மட்டக்களப்பு மாநகர முதல்வரினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இப்பகுதியில் நீண்ட காலமாக பஸ் தரிப்பிடம் இல்லாத காரணத்தினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையில் மாநகரசபையினால் இவை அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .