2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மீன்களில் இராசயன நஞ்சுப் பதார்த்தம் இல்லை: நாரா

Super User   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட கடற்கரைகளில் கரையொதுங்கிய மீன்களில் இராசயன நஞ்சு பதார்த்தம் இல்லை என ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான இயக்குனர் டாக்டர் கே.அருளானந்தம் கருத்து தெரிவிக்கையில்,

"மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரையொதுங்கிய இறந்த மற்றும் உயிருடனான மீன்களின் மாதிரிகள் மற்றும் மீன்கள் நாராவினால் எடுத்து செல்லப்பட்டு இராசயன பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டது.

இந்த பகுப்பாய்வின் போது இந்த மீன்களில் இராசயன நஞ்சுப்பதார்த்தம் இல்லை என்பது ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. எனினும் தொடர்ந்து இந்த மீன்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றமும் கடலின் அடியில் ஏற்பட்டுள்ள குளிர் நிலையினாலும் இந்த மீன்கள் கரையொதுங்குகின்றன.

கடலில் இந்த மீன்களை உண்ணும் நுண்ணுயிர்த் தாவரங்கள் அழுகியுள்ளதால் இந்த சிறிய மீன்களுக்கு உற்கொள்ள உணவு இல்லாததாலும் ஓட்சிசன் குறைபாட்டினாலும் இந்த மீன்கள் கரையொதுங்கி வருகின்றன" என்றார்.

  Comments - 0

  • Muhammadh Aadhil Monday, 22 October 2012 05:54 AM

    எது எப்படி இருந்தாலும் இந்த அறிகுறிகள் நல்லதாக தெரியவில்லை. தாவரங்கள் அழுகியமைக்கும், ஒட்சிசன் குறைபாட்டிற்குமான காரணங்களை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க அரசை வேண்குகிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .