2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

நினைவு கூரல் தினம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


சிரேஷ்ட ஊடகவியலாளர்; மர்ஹும் ஏ.எல்.எம்.பழுலுல்லாஹ்வை நினைவு கூரல் வைபவம் காத்தான்குடி அன்வர் வித்தியாலய மண்டபத்தில் நேற்று வெள்ளக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.நசீர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாவின் செயலாளர் ஜிப்ரி, அதன் உப தலைவர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி, காத்தான்குடி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சுபைர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லா மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ.ஹுஸைன் ஆகியயோர் உரையாற்றியதுடன் சிறப்புரையினை கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹி நிகழ்த்தினார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .