2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

மட்டக்களப்பில் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது. 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இந்த பாரம்பரிய பொருட்களின் கண்காட்சியை நடாத்துகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் இக்கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.

இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எம்.வாசுதேவன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.வெலிகள, மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் எம்.மலர்ச்செல்வன் உட்பட கலாசார உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் மட்டக்களப்ப மாவட்டத்திலுள்ள பாரம்பரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் இக்கண்காட்சி நிறைவடைய உள்ளது.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X