2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

உறுகாமம் குளத்தின் வான்கதவுகள் திறப்பு; மக்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 09 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களில் ஒன்றான உறுகாமம் குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், அக்குளத்தை அண்டிய கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து உறுகாமம்குளம் நிரம்பிய நிலையில், அக்குளத்தின் வான்கதவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இக்குளத்தை அண்டிய கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

சித்தாண்டி மயிலவெட்டுவான், ஈரளக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.  மயிலவெட்டுவான் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மக்கள் காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். இக்கிராமங்களிலுள்ள சில குடும்பங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.



  Comments - 0

  • RANSITH Wednesday, 09 January 2013 06:15 PM

    தமிழர்களின் இடம் பெயர்வுக்கு ஒரு முடிவே இல்லையா......? இயர்க்கை அன்னையே உனக்கும் கருணை இல்லையா......?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X