2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 11 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

வெள்ளம் காரணமாக மன்னம்பிட்டியூடான மட்டக்களப்பு - கொழும்பு போக்குவரத்தும் மகாயோயூடான மட்டக்களப்பு - பதுளை போக்குவரத்தும் நேற்று வியாழக்கிழமை மாலையிலிருந்து தடைப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடை மழையால் குளங்கள் நிரம்பியதையடுத்து, குளங்களின் வான்கதவுகள் நேற்று வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளன.

இதனால் மன்னம்பிட்டி மற்றும் கல்லள போன்ற பிரதான வீதிகளில்  வெள்ளம் பாய்ந்துகொண்டிருப்பதால் மன்னப்பிட்டியூடான மட்டக்களப்பு -
கொழும்பு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இவ்வாறே மகோயா 69ஆம் கட்டையின் பிரதான வீதியில் வெள்ளம் பாய்ந்துகொண்டிருப்பதால் இவ்வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X