2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாடுகளில் பெண்கள் கஷ்டப்படாதிருக்க திவிநெகும உதவும்: முரளிதரன்

A.P.Mathan   / 2013 ஜனவரி 18 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா

ஏற்கனவே இலங்கையினைச் சேர்ந்த 400 பேருக்கு வெளிநாடுகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் நமது பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்களுக்காகச் செல்லாக்கூடாது. அதற்காக வேண்டியே திவிநெகும திட்டத்தின் கீழ் பல்வேறுபட்ட சுயதொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளளன என மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச அரச அதிகாரிகளுக்கு திவிநெகும திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்ணம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் மற்றும் வங்கி முகாமையாளர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு பிரதியமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த காலங்களைவிட பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டு வருகின்றது. தற்போது இம்மாவட்டத்தில் கடமைபுரிகின்ற அரச அதிகாரிகள் மிகவும் சுறு சுறுப்புடனும் துடிப்புடனும் கடமைபுரிந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 வீதம் மிச்சாரத் தேவைகள் பூர்திசெய்யப்பட்டுள்ளன. மிகவிரைவில் படுவான்கரையிலுள்ள பகுதிகளில் உள்ள 12 இடங்களுக்கு மின்சார இணைப்புக்களை வழங்கவுள்ளோம்.

இதனைவிட மாவட்டத்திலுள்ள பல குளங்களை புனரமைப்புச் செய்துள்ளோம். மேலும் பல குளங்கள் புனரமைப்புச் செய் திட்டமிட்டுள்ளோம்.

இவைகளனைத்திற்கும் திவிநெகும திட்டம் பெரும் உறுதுணையளிக்கும். இத்திட்டத்தில் நமது பெண்கள் வீட்டிலிருந்தபடியே பல்வேறுபட்ட சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். இவைகளை விடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு பெண்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இனிமேல் பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பக்கூடாது என்பது பற்றி ஜனாதிபதி அவர்களிடமும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடமும் பேசியுள்ளளேன் எனவும் பிரதியமைச்சர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .