2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்புதல்'

A.P.Mathan   / 2013 ஜனவரி 18 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


'வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்புதல்' என்ற தொனிப்பொருளில் திவிநெகும (வாழ்வின் எழுச்சி) வேலைத்திட்டத்தை மேலும் பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவதற்காக வாகரை பிரதேச செயலக பிரிவுக்கான கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

வாகரை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, வாகரை பிரதேச சபை தவிசாளர் கே.கணேசன் மற்றும் பிரதேச திணைக்களத் தலைவர்கள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .