2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு வரவேற்பு

Kogilavani   / 2013 ஜனவரி 19 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


சவூதி அரேபியா, மக்காவில் நடைபெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்ற கொழும்பைச் சேர்ந்த மாணவன் அல் ஹாபிழ் முகம்மது றிஸ்கானுக்கு காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரவேற்பளிக்கப்பட்டது.

காத்தான்குடி மக்களினால் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இந்த வரவேற்பு வைபவம் நடைபெற்றது.

காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி ஹாலித் ஹசன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஹசரத், உலமாக்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்கள், சம்மேளன பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது  அல் ஹாபிழ் முகம்மது றிஸ்கானுக்கு நினைவுச்சின்னம் மற்றும் பணம் என்பன வழங்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டதுடன் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஹசரத்தின் சேவை பாராட்டியும் இதன்போது நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .