2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் சமுர்த்தி பயனாளிகள் குடும்ப பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 19 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி பயணாளிகள் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் காத்க்ன்குடி பிரதேச செயலாளர் எஸ்எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.சுபைர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் சமுர்;த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டனர்.

இதன்போது சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் சமுர்த்தி பயணாளிகளின் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான பாதணிகள், மற்றும் சமுர்த்தி திரியபியச வீடுகளுக்கான கொடுப்பனவுகள், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் நான்கு சிறுவர்களுக்கான கல்வி ஊக்கு விப்பு மாதார்ந்த நிதி மற்றும் சிறுவர் கழகங்களுக்கான உபகரணங்கள்  மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் சுய தொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் என்பன இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

சமுர்த்தி கெக்குலு சிறுவர் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சாண்றிதழ்களும் இதன் போது வழங்கப்பட்டதுடன் கடந்த ஆண்டில் புகைத்தல் எதிர்ப்பு தினத்தன்று கொடி விற்பணையின் மூலம் கூடுதலான நிதி சேகரித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த வைபவத்தில் பிறை எனும் சிறப்பு மலர் ஒன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .