2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மைலந்தனைக் கிராம மக்களுக்கு காட்டு யானைகளை சத்தம் மூலம் விரட்டக் கூடிய சாதனம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 19 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா


இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் நேற்று வெள்ளிக்கிழமை - காட்டுயானைகளின் அட்டகாசங்களையும் அடாவடித் தனங்களையும் அடிக்கடி எதிர்கொண்டு வரும் மைலந்தனைக் கிராம மக்களுக்கு, காட்டு யானைகளை சத்தம் மூலம் விரட்டக் கூடிய சாதனம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

மைலந்தனைக் கிராம மக்களினதும் அப்பகுதி கிராம சேவை அதிகாரியினதும் வேண்டுகோளிற்கிணங்க இச்சாதனம் வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.

தினம் தினம் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு உட்பட்டுவரும் தமக்கு இச்சாதனம் காட்டு யானைகளை விரட்டக் கூடியதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என மைலந்தனைக் கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவி தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .