2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

நெற்சார் உற்பத்தியில் பெண்களின் பங்கை அதிகரிப்பது தொடர்பான பயிற்சிநெறி

Kogilavani   / 2013 ஜனவரி 21 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


கிழக்கு மாகாணத்தின் நெல் உற்பத்தியில் பெண்களின் பங்கை நிலைபேறான வகையில் அதிகரித்தல் மற்றும் சந்தை வாய்ப்பு, வள மேம்பாடு மற்றும் வலுப்படுத்துதல் தொடர்பான மூன்றுநாள் வதிவிடப் பயிற்சி நெறி ஒக்ஸ்பாம் ஜீ.பி நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பயிற்சியாளர்களைப் பயிற்றுவிக்கும் வகையில் திருகோணமலை வெல்கமி ஹொட்டலில் 18ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இப் பயிற்சி நெறியில், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த திணைக்கள அதிகாரிகள், கிழக்குப் பல்கலைக்கழக பிரதிநிதிகள், வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள், உள்ளூர் நிறுவனங்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சி நெறியினை ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் ஆசியப்பிராந்தியத்துக்கான வளவாளர்களான பங்காளதேஸ் நாட்டின் நூறுல் அமின், பிலிப்பைன்ஸ் நாட்டின் எலோறா பெரடஸ் மற்றும் ஜொய்லிங்க் விலனுவா ஆகியோர் நடத்தினர்.

அத்துடன், ஒக்ஸ்பாம் ஜீ.பி நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையின் எஸ்.ரகுராமமூர்த்தி, ரி.சரவணபவன், எம்.மதியழகன் ஆகியோர் இப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நெல் உற்பத்திக்கான பெறுமதி சேர் செயற்திட்டச் சங்கிலி தொடர்பான விளக்கங்களையும் வழங்கினர்.

காலநிலை மாற்றங்கள், அதன் பாதிப்புகள், காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலான எதிர்காலத்திட்டமிடல்கள், மற்றும் உற்பத்தி அதிகரிப்புகள், அத்துடன் பொருளாதார மேம்பாட்டுடனான பெண்கள் தலைமைதாங்கும் விவசாய அமைப்புகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இப்பயிற்சி நெறியில் கற்பிக்கப்பட்டன.

அதேநேரம், இது தொடர்பான கள ஆய்வு எதிர்வரும் வாரத்தில் நிறைவுபெற்று இதன் பெறுபேறுகள் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தலுக்காக முன்வைக்கப்படவுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .