2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்-முஸ்லிம் கிராமங்களை இணைக்கும் தீர்மானத்தை கண்டித்து மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம

Kogilavani   / 2013 ஜனவரி 22 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு, கல்குடா தொகுதியிலுள்ள வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள ஒருசில  தமிழ் கிராமங்களை ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைப்பதற்கு எடுத்த தீர்மானத்தை கண்டித்து மட்டக்களப்பு மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் விஷேட அமர்வு மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை கூடியது.

தமிழ்-முஸ்வம் கிராமங்களை இணைக்கும் தீர்மானத்தை கண்டிக்கும் பிரேரணையை ஈரோஸ் கட்சியின் உறுப்பினர் இராஜநாதன் பிரபாகரன் பிரேரணை ஒன்றை முன்வைத்தார். அந்த பிரேரணையை அடிப்படையாக கொண்டே இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.

'கடந்த முப்பது வருடகால யுத்தத்திற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் உறவு பரஸ்பரம் முன்னேற்றமடைந்து வருகின்றது இந்நிலையில் இந்த முடிவானது சமூகங்களுக்கிடையில் மீண்டுமொரு கசப்புணர்வை ஏற்படுத்த வழிவகுக்கும். அந்த வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இந்த முடிவு குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

எதிர்வரும் 24ஆம் திகதி அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் நடைபெறவுள்ள இது தொடர்பான கூட்டத்தில் இந்த முடிவு குறித்து மீள் பரிசீலனை செய்யப்பட்டு இது தொடர்பில் சிறந்த முடிவு ஒன்று எடுக்கப்படுமென நாங்கள் கருதுகின்றோம்.

பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்துவரும்  கிராமங்களை இன்னுமொரு பிரதேச செயலகப்பிரிவுடன் இணைப்பதை கண்டிப்பதுடன் அந்த முடிவு குறித்த மீள் பரிசீலனை செய்யப்படல் வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாநகர சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது' என மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா மேலும் தெரிவித்தார்.



  Comments - 0

  • thamil peasum mahan Wednesday, 23 January 2013 02:40 AM

    நிலம் சம்மந்தமாக எதுவும் தெரியாமல் முடிவு எடுப்பதுதான் குழப்பம் ஆகும். முஹைடின் அப்துல் காதர் அப்போது கிரானுக்கு கொடுத்து வாகரை இல் வாஙக எடுத்த முயர்சியானது இப்போது காக்காமார் எம் நிலத்தை எடுக்கின்ட்ரான் என பொய் பிரச்சாரம் செய்ய காரனமாகியது, கொடுத்ததை கேட்கின்ட்ரனர் மனித நேயம் இருந்தால் கொடுக்கலாம்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .