2026 மே 07, வியாழக்கிழமை

ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஆசனப் பதிவுகளை மேற்கொள்ள முடியாது

Super User   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஆசனப்பதிவுகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம் அலிவா தெரிவித்தார்.

இதனால் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஏறாவூரில் புகையிரத நிலையத்தில் எந்தவித ஆசனப்பதிவுகளும் இடம்பெறாது என அவர் குறிப்பிட்டார்.

ஏறாவூர் புகையிரத நிலையத்தில் கொழும்பு  - மட்டக்களப்பு புகையிரத சேவைக்கான ஆசனப் பதிவுகள் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டன.

"எனினும் தற்போது ஆசன பதிவுகள் இணையத்தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதனாலேயே ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஆசனப்பதிவுகளை மேற்கொள்ள முடியாதுள்ளது" என மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் குறிப்பிட்டார்.

ஏறாவூர் புகையிரத நிலையத்தில் கணனி வசதிகள் இல்லாததன் காரணமாகவே ஏறாவூரில் ஆசனப்பதிவுகள் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு, வாழைச்சேனை, வெலிக்கந்தை, மற்றும் பொலநறுவை ஆகிய  புகையிரத நிலையங்களில்; வழமைபோன்று ஆசனப் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .