2026 மே 04, திங்கட்கிழமை

வில்லுக்குளம் கிராம மக்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வில்லுக்குளம் கிராம மக்களுக்கான நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி கௌரீஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான 20 வீடுகள் மற்றும்  சிறுவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்  கையளிக்கப்பட்டன.

வில்லுக்குளம் கிராம விவசாயிகள் கடந்த கால சுனாமி அனர்த்தத்தின் போது அவர்களது வீடுகளை இழந்திருந்தனர்.

சர்வதேச லயன்ஸ் கழகம் இவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்;கான நிதியினை வழங்கியிருந்தது. ஏற்;கனவே 20 வீடுகள் மேற்படி கழகத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

306c2 லயன்ஸ் கழக வலய ஆளுனர் காமினி ஜயசிங்க,பல் மாவட்ட லயன்ஸ் கழகத் தலைவர் சுனில் தர்மரெட்ண, பிராந்திய தலைவர் அ.செல்வேந்திரன், வலயத் தலைவர் ஏ.இரவீந்திரன், ஆளுனர் திட்ட இணைபபாளர் சிறிதரதீசன் ஆகியோர்கள் உட்பட பலர் இதன்போது கலந்துகொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .