2026 மே 04, திங்கட்கிழமை

கடலில் மூழ்கிய இளைஞனைக் காணவில்லை

Kanagaraj   / 2013 ஏப்ரல் 12 , பி.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு வாகரைக் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் காணாமல் போயுள்ளான்.வாகரை முகத்துவாரக் கடற்பகுதியில் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஐம்பது வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த கமலன் லதுஷன் என்ற 16 வயது இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.நண்பர்களுடன் சேர்ந்து கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போதே இவர் காணாமல் போயுள்ளார்.

கடற்படையினரும் மீனவர்களும்  நேற்று மாலை வரை தேடுதலில் ஈடுபட்டனர். எனினும் சடலத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதி உயர்தரத்திற்குச் சித்திடைந்தவர்களில் ஒருவர் கடலில் மூழ்கிய இந்த இளைஞன் என்று வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .