2026 மே 04, திங்கட்கிழமை

வீதிகளுக்கு தெரு மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

Kogilavani   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.நூர்தீன்


காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பல வீதிகளுக்கு தெரு மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

புதிய காத்தான்குடி டெலி கொம் வீதி, புதிய காத்தான்குடி பதுறிய்யா ஜும் ஆ பள்ளிவாயல் வீதிகளுக்கே தெரு மின்விளக்குகள் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வீதிகளில் நீண்டகாலமாக மின்விளக்குகள் ஒளிரமால் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர் மற்றும் எம்.அலிசப்ரி, எம்.எஸ்.சியாத் ஆகியோரின் முயற்சியினால் இம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய காத்தான்குடியிலுள்ள பல பகுதிகளில் இவ்வாறான தெரு மின் விளக்குகளை பொருத்த திட்டமிட்டுள்ளதாக பதில் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .