2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடியில் புதிய பள்ளிவாயல் திறப்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயலொன்று நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி 6ஆம் குறிச்சி அமானுள்ளா வீதியில் பாத்திமா மஸ்ஜித் எனும் பெயரிலான இப் புதிய பள்ளிவாயலை காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் எம்.ஏ.அப்துல்லாஹ் ஆலிம் றஹ்மானி ஹசரத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாணசபை உறப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் உட்பட உலமாக்கள் முக்கியஸ்த்தர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இப்புதிய பள்ளிவாயலில் தொழுகையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .