2026 மே 07, வியாழக்கிழமை

ஆரையம்பதி நிர்வாகத்தில் காத்தான்குடி நகர சபை தலையிடக்கூடாது: பிரசாந்தன்

Super User   / 2013 மே 02 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆரையம்பதி நிருவாகத்தில் காத்தான்குடி நகர சபை தலையிடக்கூடாது என ஆரையம்பதி ஆற்றல் பேரவையின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

"தமிழ் பிரதேசமான ஆரையம்பதியின் கிழக்குப் பகுதிக்குள் காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி பிரதேச செசயலகத்தின் நிருவாக தலையீடுகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் எமது பிரதேசத்தினை அடக்க முற்படுவது நிறுத்தப்படல் வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

நாம் எமது நிருவாக செயற்பாடுகளை சுயமாக செய்ய இடமளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஆரையம்பதி ஆற்றல் பேரவையின் ஏற்பாட்டில் ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்டந்துரையாற்றிய அவர்,

"இந்த நடவடிக்கைகள் ஒரு இனத்தை இன்னொரு இனம் சந்தேக கண் கொண்டு பாhக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேதின வைபவத்தில் ஆற்றல் பேரவையினால் ஜனாதிபதிக்கும் உலகத்திற்கும் இதை நாம் தெரியப்படுத்துகின்றோம்.
மண்முனைப்பற்று காத்தான்குடி பிரதேச எல்லைகள் வர்த்தமானியில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த எல்லையினை மீண்டும் ஆரையம்பதி பக்கம் உள் நோக்கிநகர்த்த முற்படுவதும் ஆரையம்பதி கிழக்கு பகுpக்குள் காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிருவாக தலையீடுகள் மூலம் எமது பிரதேசத்தனை அடக்க முறபடுவது நிறுத்தப்பட்டு நாம் எமது பிரதேசத்தின் நிருவாக செயற்பாடுகளை சுயமாக செயற்பட இடமளிக்க வேண்டும்.


எமது பிரதேசத்தில் இன மோதலை உருவாக்க கூடிய திட்டமிட்ட காண சுவீகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும். மண்முனைப்பற்றிலுள்ள அரச காணிகளை அடையாளப்படுத்துவதற்கு மாவட்ட செயலாளர் தலைமையிலான நடுநிலைக்குழு அமைக்கப்பட்டு அடையாளப்படுத்தப்படும் அரச காணிகளை எமது பிரதேச மக்கள் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

மண்முனைப்பற்று பிரதேசம் 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டது. இதில் 80 சதவீதம் தமிழர்களும், 20 சதவீதம் முஸ்லிம்களையும் கொண்ட இன ஒருமைப்பாட்டுடன் வாழும் போது நிதி ஒதுக்கீடுகள் பாகுபாடுடன் ஒதுக்கப்படுவது இன ஒற்றுமையினை சீர்குலைக்கும் செயற்பாடாகவும் ஒரு இனம் மற்றைய இனத்தினை சந்தேகத்துடன் பார்க்கும் நிலையினையும் இது ஏற்படுத்தியுள்ளது.

எனவே மண்முனைப்பற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி 27 கிராம சேவகர் பிரிவுக்கும் சமமாக பங்கிடப்படல் வேண்டும். முன்பு குறிப்பிட்டது போல் ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா உள்ளார்.

இப்பிரதேசத்திலுள்ள தமிழர்களையும் கவனத்திற் கொண்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைததலைவராக ஜனாதிபதியின் கிழக்கு விவகாரங்களுக்கான ஆலாசகர் சிவநேசதுரை சந்திகாந்தனையும் நியமிப்பதன் மூலம் அபிவிருத்தி பங்கீடுகளை பக்கசார்பற்று மேற்கொள்ள வழிகோலும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .