2026 மே 07, வியாழக்கிழமை

பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை நிறுவத்தடை

Kanagaraj   / 2013 மே 30 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
மட்டக்களப்பு,  பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை நிறுவுதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த இடத்தில்   புத்தர் சிலை  வைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதிக்கு  ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  உள்ளுர் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் நேற்று புதன்கிழமை காலை எதிர்பபு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலிஸாரால்; மட்டக்களப்பு நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில்,  குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொதுத் தொல்லையையும் சமூக அமைதிக்குப் பங்கத்தையும் ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர். 

அத்துடன்,  அந்த இடத்தில் படையினரும் பொலிஸாரும் முகாமிட்டிருந்தபோது அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை தற்சமயம் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் பராமரிப்பின்றிக் காணப்படுகின்றது.

அந்த புத்தர் சிலை அமைந்துள்ள சுற்றுப் புறச் சூழலானது முழுக்க முழுக்க இந்துக்களும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்ற பகுதியாகும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
 
பொலிசாரின்; அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நீதவான்  என். எம். எம். அப்துல்லாஹ் சிலை வைப்பதற்கு  தடை விதித்துடன் சிலை வைப்பதற்காக முன்னெடுக்கப்படும் நிர்மான வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0

  • vallarasu Friday, 31 May 2013 04:41 PM

    சபாஸ்... சரியான நெத்தியடி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .