2026 மே 15, வெள்ளிக்கிழமை

செட்டிபாளையம் தள வைத்தியசாலைக்கு ஆலயத்தினால் நிலம் அன்பளிப்பு

Super User   / 2013 ஜூலை 03 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்
, எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு, செட்டிபாளையம் தள வைத்தியசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று  இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் திருமதி பி.கே.ஞானகுணாளன் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

இதன்போது செட்டிபாளையம் கண்ணகியம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் வைத்தியசாலை கட்டிட வேலை நிர்மாணத்திற்காக ஒன்றரை ஏக்கர் நிலம் அமைச்சரிடம் அன்பளிப்புச் செய்யபப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .